இந்தோனேசிய தலைநகர் அருகே இடம்பெற்ற ரயில் மோதல் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 84 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜகார்த்தா நகரத்திற்கு வெளியே உள்ள பெகாசி பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் பயணிகள் ரயிலும் நீண்ட தூர ரயிலும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
இந்தோனேசியாவின் அரசு ரயில்வே நிறுவனமான PT KAI வெளியிட்ட தகவலின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளை மேற்கொண்ட இந்தோனேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் அதிகாரிகள், சிதைந்த வண்டிகளில் சிக்கியவர்களை மீட்பது கடினமான செயல்முறையாக இருந்ததாக தெரிவித்தனர். குறிப்பாக பெண்கள் மட்டும் பயணித்திருந்த ஒரு வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பயணிகள் ரயில் முதலில் ஒரு டாக்ஸியுடன் மோதிய பின்னர், எதிர்திசையில் வந்த நீண்ட தூர ரயிலுடன் மோதியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பிரபோவோ சுபியாண்டோ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க தண்டவாளப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.






3 Comments