பங்களாதேஷ் தனது முதல் அணு மின் திட்டமான ரூப்பூர் அணுமின் நிலையம் திட்டத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) முதல் முறையாக யுரேனியம் எரிபொருளை அணு உலையில் ஏற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
2,400 மெகாவாட் திறன் கொண்ட இந்த ஆலை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பின்னர், நாட்டின் மொத்த மின்சார தேவையின் சுமார் 10 சதவீதத்தை பூர்த்தி செய்யும் என அரசு தெரிவித்துள்ளது.
$11 பில்லியன் மதிப்பிலான இந்த திட்டம் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 300 மெகாவாட் மின்சாரம் 2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுத் திறன் உற்பத்தி 2027 இறுதிக்குள் எட்டப்படும்.
எரிபொருள் ஏற்றப்பட்ட பின், கட்டுப்படுத்தப்பட்ட அணு பிளவு செயல்முறை தொடங்கப்படும். இது “physical startup” எனப்படும் ஆரம்ப இயக்க கட்டமாகும்.
பங்களாதேஷ் தற்போது தனது எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் பெரும்பகுதியை இறக்குமதியில்தான் சார்ந்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களால் எரிசக்தி விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால் கோடை காலங்களில் மின்சார பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அணு மின் திட்டம் நாட்டின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான பாதுகாப்பு சோதனைகள் மற்றும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.






3 Comments