Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

கோல்டர்ஸ் கிரீன் தாக்குதலுக்குப் பிறகு இங்கிலாந்து பயங்கரவாத அச்சுறுத்தல் !

இங்கிலாந்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், ஆனால் அச்சத்தில் வாழ வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் யூதர்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை “கணிசமானது” என்பதிலிருந்து “கடுமையானது” என உயர்த்தப்பட்டது. இந்த மாற்றம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சர் டான் ஜார்விஸ் கூறுகையில், இந்த உயர்வு ஒரே ஒரு சம்பவத்தின் காரணமாக அல்ல என்றும், பரந்த அளவில் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் வலதுசாரி தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்ததன் காரணமாகவும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத், இந்த நிலை உயர்வு பொதுமக்களுக்கு கவலை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், காவல்துறை மற்றும் உளவுத்துறை அமைப்புகள் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக பணியாற்றி வருவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், “விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றும், சந்தேகத்துக்கிடமான நிகழ்வுகளை காவல்துறைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

உதவி காவல் ஆணையர் லாரன்ஸ் டெய்லர் கூறுகையில், யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 45 வயதான சந்தேக நபர் எஸ்சா சுலைமான் காவலில் உள்ளார். அவர் முன்னதாக 2020ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு திட்டமான “Prevent” திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதங்களாக இங்கிலாந்தில் யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் மற்றும் தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...