மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் “காகித புலிகள்” போன்றவை என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், மேற்காசியப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க முடியாத “காகித புலிகள்” என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தாக்குதலுக்கு ஆதரவாக செயல்பட்ட இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகளையும் மறைமுகமாக குறிக்கும் வகையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களின் போது பல நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ராக்கெட்டுகள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பாரசீக வளைகுடா பகுதி வெறும் கடல் பரப்பு அல்ல; அது ஈரானின் அடையாளம் மற்றும் நாகரிகத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அயதுல்லா மொஜ்தபா காமேனி குறிப்பிட்டுள்ளார்.






3 Comments