மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த சில நாட்களாக உள்நாட்டு மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன அந்நாட்டின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அசாவாத் விடுதலை முன்னணி (FLA) கிளர்ச்சியாளர்கள் மற்றும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஜிஹாதி அமைப்புகள் இணைந்து பல தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கிடல் (Kidal) அருகே உள்ள டெசலிட் (Tessalit) நகரில் அமைந்திருந்த முக்கிய ராணுவ முகாமை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர் அமைப்பு அறிவித்துள்ளது. மாலி ராணுவத்தினரும் ரஷ்ய ஆதரவு “ஆப்ரிக்கா கோர்ப்ஸ்” படையினரும் அங்கிருந்து பின்வாங்கிய பின்னரே இந்த முகாம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
டெசலிட் ராணுவ முகாம் அல்ஜீரியா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள முக்கிய மூலோபாய தளமாகக் கருதப்படுகிறது. இந்த பகுதியை இழந்தது மாலி இராணுவ ஆட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மாலியின் பல நகரங்களில் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் சாடியோ கமாரா உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.






3 Comments