ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில் 34 வயதுடைய ஆண் பயணி ஒருவர், விமானம் டாக்ஸி செய்து கொண்டிருந்தபோது அவசர வெளியேறும் கதவுகளில் ஒன்றைத் திறந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
231 பயணிகளுடன் வந்த அந்த விமானம் ஓடுபாதை மற்றும் முனையத்தை இணைக்கும் டாக்ஸிவே வழியாக சென்று கொண்டிருந்தபோது, புதுக்கோட்டையைச் சேர்ந்த அந்த பயணி திடீரென வெளியேறும் கதவைத் திறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார். பின்னர் முறையான புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகளுடன் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பயணியை கைது செய்தனர்.
தற்போது அந்த பயணியிடம் விசாரணை நடைபெற்று வருவதுடன், அவரது மனநிலை தொடர்பான மதிப்பீடும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






3 Comments