தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் இன்று (மே 4) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளன.
இந்த நிலையில், “தமிழக வெற்றிக் கழகம்” நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டின் அரசியலில் புதிய மாற்றத்திற்கான தொடக்கம் இன்று அமையும் என தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், “தமிழ்நாட்டில் இன்று உருவாகும் மாற்றத்திற்கான ‘புயல்’ நாள் முழுவதும் வலுவாக வீசும். மாலை 7 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய அரசியல் சக்திகள் மக்கள் வாக்கால் நீக்கப்படுவார்கள். குடும்ப அரசியல் முடிவுக்கு வரும்; இனி பிறப்பின் அடிப்படையில் யாரும் முதல்வராக முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார் இதனிடையே, தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மாநில அரசியல் நிலவரம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






3 Comments