தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் பயன்படுத்தப்பட்ட 234 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், Vijay தலைமையிலான தவெக கட்சியைச் சுற்றியும் கவனம் திரும்பியுள்ளது. அவரின் இல்லத்துக்கு பிரதான ஜோதிடர் பூங்கொத்துடன் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, விஜய் வெளியே செல்லும் போது ரசிகர்கள் வாகனங்களில் பின்தொடர்வதைத் தவிர்க்க, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விதிமுறைகளை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், விபத்துகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நிலை பேணுவதற்காக சுமார் 300 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments