அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்வைத்த 14 அம்சக் கோரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் தனது Truth Social பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் உலகிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்குப் பெரிய விலை கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா முன்வைத்த 9 அம்சத் திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அதற்குப் பதிலாக இந்த 14 அம்சத் திட்டம் முன்மொழியப்பட்டது.
அந்த முன்மொழிவில், அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றிய பகுதிகளில் இருந்து விலக வேண்டும், கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்பட வேண்டும், லெபனான் உட்பட பல முனைகளில் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும், ஹோர்முஸ் நீரிணைக்கு புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும், மேலும் 30 நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






3 Comments