காசா பகுதியில் புதிய பொது சுகாதார நெருக்கடி உருவாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) எச்சரித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நெரிசலான முகாம்களில் தோல் நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.
அண்மைய மாதங்களில் சிரங்கு, சின்னம்மை உள்ளிட்ட தோல் நோய்த்தொற்றுகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை, கடுமையான நெரிசல் மற்றும் சுகாதார வசதிகளின் பற்றாக்குறை ஆகியவை இந்த நோய்கள் பரவுவதற்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், கோடைக்காலம் நெருங்கும் நிலையில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதையடுத்து உடனடி மனிதாபிமான உதவி மற்றும் சுகாதார நடவடிக்கைகள் அவசியம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.






3 Comments