தெஹ்ரான் மற்றும் பெய்ஜிங் இடையிலான தொடர்ச்சியான இராஜதந்திர ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று சீனா பயணம் செய்ய உள்ளார் என்று ஈரானின் அரை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் மெஹர் தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது, அராக்சி சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்து, இருதரப்பு உறவுகள், பிராந்திய நிலவரங்கள் மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து விரிவாக கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இராஜதந்திர நகர்வு, அமெரிக்கா–சீனா உச்சிமாநாடு திட்டமிடப்பட்டுள்ள நேரத்துக்கு முன்னதாக நடைபெறுகிறது. மே 14 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன தலைவர் ஜி ஜின்பிங் இருவரும் சந்திக்க உள்ளனர்.
முன்னதாக மார்ச் மாத இறுதியில் டிரம்ப் சீனாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஈரான் தொடர்பான அமெரிக்க–இஸ்ரேல் பதற்றம் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த சூழலில், ஈரான்–சீனா பேச்சுவார்த்தை பிராந்திய அரசியல் நிலவரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.






3 Comments