நடிகர் விஜய் தலைமையிலான விஜய் வழிநடத்தும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 108 இடங்களைப் பெற்று ஆட்சியமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மே 7ஆம் தேதி அவர் முதலமைச்சராகப் பதவியேற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது கருத்தில், தமிழக மக்களின் நலனுக்காக புதிய அரசுடன் இணைந்து களப்பணியாற்ற தயாராக இருப்பதாகவும், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார் இத்தகவல்கள் தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.






3 Comments