நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, சீனா மற்றும் ரஷ்யா தலைமையிலான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் (SCO) தனது உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தானில் நடைபெற்ற SCO உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பியபோது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
துருக்கி தற்போது SCO-வில் “உரையாடல் பங்காளி” என்ற அந்தஸ்தில் உள்ளது. அந்த அமைப்பில் முழு உறுப்பினராக இணைவதற்கான வாய்ப்பு குறித்து பரிசீலிப்பது, துருக்கி மேற்குலகம் அல்லது வேறு எந்த கூட்டணியிலிருந்தும் விலகுவதை அர்த்தப்படுத்தாது என எர்டோகன் தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் உறுப்பினராக உள்ள துருக்கி, ஒருபுறம் மேற்கத்திய கூட்டணியுடனான உறவுகளைத் தொடர்ந்து பேணியபடி, சீனா மற்றும் ரஷ்யாவுடன் தனது அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.






3 Comments