எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை புதன்கிழமை கெய்ரோவில் வரவேற்றார் கடந்த ஒரு தசாப்தத்தில் ஷி ஜின்பிங் எகிப்துக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் அமெரிக்கா–ஈரான் போர் காரணமாக பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் மறுபரிசீலனை செய்து வரும் நிலையில், ஷியின் இந்தப் பயணம் சீனா–எகிப்து இடையிலான அதிகரித்து வரும் உறவுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கெய்ரோவில் உள்ள இத்திஹாதியா ஜனாதிபதி மாளிகையில் இராணுவ மரியாதையுடன் ஷி ஜின்பிங்கை சிசி வரவேற்றதாக எகிப்து அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளியான எகிப்து, வாஷிங்டனிடமிருந்து ஆண்டுதோறும் சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் இராணுவ உதவியை பெற்று வருகிறது. அதேவேளை, சீனாவுடனான பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பையும் எகிப்து தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
2014ஆம் ஆண்டு சிசி சீனாவுக்கு விஜயம் செய்து மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் படிப்படியாக வலுப்பெற்றுள்ளன.
எகிப்து தனது சர்வதேச கூட்டணிகளை விரிவுபடுத்தும் முயற்சியும், ஆசியாவுக்கு அப்பால் தனது செல்வாக்கை அதிகரிக்கும் சீனாவின் முயற்சியும் ஒன்றிணைந்துள்ளதாக முன்னாள் எகிப்திய இராஜதந்திரி அய்மன் ஸைனல்டீன் தெரிவித்துள்ளார்.






3 Comments