பாகிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தில், பயங்கரவாத வழக்குகளை கிட்டத்தட்ட முழுமையான ரகசியத்தன்மையுடன் நடத்துவதற்கு அனுமதிக்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் சாட்சிகளின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படலாம்.
இதன் மூலம், பாகிஸ்தானின் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளில் ஒன்றான பயங்கரவாதக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் ஒருவர், தமக்கு எதிராக வழக்கை விசாரித்த நீதிபதி யார், வழக்கை நடத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் யார், தமக்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் யார் என்பதைக் கூட அறியாமல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படும் நிலை ஏற்படக்கூடும்.
பயங்கரவாத வழக்குகளில் நீதித்துறை அதிகாரிகள் மற்றும் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நியாயமான விசாரணைக்கான உரிமை மற்றும் சட்டப் பாதுகாப்புகள் குறித்து இந்தச் சட்டம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
வழக்கின் முக்கிய தரப்பினரின் அடையாளங்களே மறைக்கப்படுவதால், நீதித்துறை வெளிப்படைத்தன்மை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் தற்காப்பு உரிமை பாதிக்கப்படக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.






3 Comments