Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

மருத்துவமனை அழிந்த நிலையில் கூடாரத்தில் பல் மருத்துவ சேவை !

போரினால் மருத்துவமனைகள் மற்றும் கட்டிடங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ள நிலையில், நோயாளிகளுக்கு அதிக வாடகைச் சுமை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் காஸாவில் மருத்துவர் ஒருவர் சிறிய கூடாரத்தில் பல் மருத்துவச் சேவையை வழங்கி வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரிஸ்க் சுஃப்யான் அபோ ஹலிமா என்ற மருத்துவர், கடுமையான கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறிய கூடாரமொன்றை மருத்துவ நிலையமாக மாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

காஸாவில் நிலவும் கட்டிடத் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்துள்ள வாடகைச் செலவுகளே இந்த மாற்று ஏற்பாட்டுக்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவச் சேவையை வழங்குவதுடன், தன்னிடமுள்ள மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் இந்த ஏற்பாடு உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் வேறு கட்டிடமொன்றை வாடகைக்கு எடுப்பது வெளிப்படையான தீர்வாக இருந்தாலும், வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. பயன்பாட்டில் எஞ்சியுள்ள கட்டிடங்களின் வாடகையும் பலரால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கைக்கோள் மையமான UNOSAT தரவுகளின்படி, காஸா நகரம் மற்றும் வடக்கு காஸாவில் உள்ள கட்டிடங்களில் ஐந்தில் நான்கு பங்குக்கும் அதிகமானவை இஸ்ரேலிய தாக்குதல்களால் முற்றிலும் அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதனால் தற்போது சுமார் ஐந்தில் ஒரு பங்கு கட்டிடங்களே பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் கட்டுமானப் பொருட்கள் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களை பழுதுபார்ப்பதும் பெரும் சவாலாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் அடிப்படை மருத்துவ வசதிகளுக்கான அணுகல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில், சிறிய கூடாரத்தையே மருத்துவ நிலையமாக மாற்றி ஏழை நோயாளிகளுக்கு சேவை வழங்கி வரும் மருத்துவரின் முயற்சி கவனம் பெற்றுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...