Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

டிரம்ப் ஆதரித்த காங்கிரஸ் மாவட்ட வரைபடத்தை மிசோரி உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது !

நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரித்த புதிய காங்கிரஸ் மாவட்ட வரைபடத்தை மிசோரி உச்ச நீதிமன்றம் ஒருமனதாக தடுத்து நிறுத்தியுள்ளது.

இதன் மூலம் முந்தைய காங்கிரஸ் மாவட்ட எல்லைகள் மீண்டும் அமுலுக்கு வருகின்றன. இந்தத் தீர்ப்பு, தேர்தல் மாவட்ட மறுசீரமைப்பு தொடர்பான தேசிய அளவிலான அரசியல் மோதலில் டிரம்ப் தரப்புக்கு ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க நீதித்துறை பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடந்த 2025 செப்டெம்பரில் சட்டமாக்கப்பட்ட புதிய காங்கிரஸ் வரைபடம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் மேலும் ஒரு ஆசனத்தைப் பெறுவதற்கு சாதகமாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த நடவடிக்கைக்கு மிசோரி மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டது. புதிய மாவட்ட வரைபடத்தை வாக்கெடுப்புக்கு உட்படுத்தக் கோரி சுமார் 300,000 பேர் மனுவில் கையெழுத்திட்டனர்.

மிசோரி வெளியுறவுச் செயலாளர் டென்னி ஹோஸ்கின்ஸ், அந்த மனு சட்டரீதியாக போதுமானதாக இல்லை எனக் கூறி நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சட்டப் போராட்டத்திலேயே மாநில உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

மனு சட்டபூர்வமானது, போதுமானது மற்றும் உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்டது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், வெளியுறவுச் செயலாளரின் முடிவு தவறானது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

மிசோரி அரசியலமைப்பின் கீழ் இத்தகைய மனுக்களைச் சமர்ப்பிக்க சட்டரீதியான ஏற்பாடு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அதற்கு விதிவிலக்கு எதுவும் பொருந்தாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏழு நீதிபதிகளைக் கொண்ட மிசோரி உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்தத் தீர்ப்பு இறுதியானதாக இருக்க வாய்ப்பில்லை. குடியரசுக் கட்சி அதிகாரிகள் தீர்ப்பை மேல்முறையீடு செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

மேலும், நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சுமார் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், புதிய மாவட்டங்களுக்குப் பதிலாக பழைய மாவட்ட எல்லைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் நிர்வாகத்திலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, ஒரு மாநிலத்தின் பொதுத் தேர்தலில் அதன் முதன்மைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மாவட்ட எல்லைகளிலிருந்து மாறுபட்ட காங்கிரஸ் மாவட்ட எல்லைகளைப் பயன்படுத்த முடியுமா என்பது உள்ளிட்ட சட்டரீதியான கேள்விகளும் இன்னும் நிலுவையில் உள்ளன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...