நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்ததாக நம்பப்பட்ட தொழிலாளர்களில் இருவர் ஒன்பது நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் பெருவெள்ளம் பல நகரங்களைத் தாக்கியதுடன், கிராமங்களையும் அடித்துச் சென்றது.
இந்த வெள்ளத்துக்குப் பின்னர் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கத்துக்குள் பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. அவர்களை மீட்கும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளம் ஏற்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை இரு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். முதல் தொழிலாளி மீட்கப்பட்டதை நேபாள இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜா ராம் பஸ்நெட் உறுதிப்படுத்திய சிறிது நேரத்திலேயே, இரண்டாவது தொழிலாளி மீட்கப்பட்ட தகவலை நேபாள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ராம் நியூபனே சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
சுரங்கத்தின் ஆழமான பகுதிகளில் இருந்து மேலும் பலரின் குரல்கள் கேட்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்னும் பலர், சாத்தியமாக டஜன் கணக்கானவர்கள் கூட உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட இருவரின் மீட்பு நடவடிக்கை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.






3 Comments