Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

எத்தியோப்பியாவில் மீண்டும் பதற்றம் !

எத்தியோப்பியாவின் மத்திய அரசாங்கத்துக்கும் டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF) அமைப்புக்கும் இடையே 2022 நவம்பரில் கையெழுத்தான பிரிட்டோரியா ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளாக நீடித்த பேரழிவுமிக்க போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிரந்தரமாக போர் நடவடிக்கைகளை நிறுத்துதல், டிக்ரே படைகளை ஆயுதக் களைவு செய்து கலைத்து சமூகத்தில் மீளிணைத்தல், அரசியல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

மேலும், ஒப்பந்தத்தின் 7ஆவது பிரிவின்படி, TPLF புதிய இராணுவப் படைகளை ஆட்சேர்ப்பு செய்தல், பயிற்சி அளித்தல், நிலைநிறுத்துதல் அல்லது அணிதிரட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், மீண்டும் போர் ஏற்படுவதற்கான தயாரிப்புகளையும் மேற்கொள்ளக் கூடாது என குறிப்பிடப்பட்டது.

எனினும், ஒப்பந்தம் கையெழுத்தாகி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பெரிய அளவிலான போர் முடிவுக்கு வந்த போதிலும், அந்த மோதலுக்கு காரணமாக இருந்த பல அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன.

குறிப்பாக, 2024ஆம் ஆண்டுக்குப் பின்னர் TPLF தனது அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் வலுப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, இராணுவ ரீதியான செல்வாக்கையும் தக்கவைத்துக்கொண்டு புதிய தொடர்புகளையும் அந்த அமைப்பு உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

TPLF மற்றும் எரித்திரிய அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்புகள், டுபாய் மற்றும் ஸலாம்பெஸ்ஸாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்புகள், டிக்ரே பிராந்தியத்தின் அரசியல் கட்டுப்பாட்டுக்கான புதிய போராட்டம், ஆட்சேர்ப்பு மற்றும் படையணி அணிதிரட்டல் தொடர்பான தகவல்கள் ஆகியவை பிராந்தியத்தில் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இதனுடன், டிக்ரே படைகள் தொடர்புபட்டதாகக் கூறப்படும் புதிய மோதல்களும், எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு குழுக்களின் தளர்வான கூட்டணியாக ‘ட்ஸிம்டோ’ (Tsimdo) உருவெடுத்துள்ளமையும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் ஒன்றாகப் பார்க்கப்படும்போது, பிரிட்டோரியா ஒப்பந்தம் முழுமையான சமாதான மாற்றத்தை ஏற்படுத்தியதா அல்லது TPLF தனது அமைப்பு மற்றும் அரசியல் நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான இடைக்காலமாக அமைந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எவ்வாறாயினும், TPLF ஆரம்பத்திலேயே பிரிட்டோரியா ஒப்பந்தத்தை ஒரு தற்காலிக இடைநிறுத்தமாகப் பயன்படுத்த திட்டமிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், 2024ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்றுவரும் சம்பவங்கள், ஒப்பந்தத்தின் மூலம் குறைக்கப்பட வேண்டியிருந்த TPLF-இன் அமைப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியான பங்கு இன்னமும் தொடர்வதாகக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...