Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான திகதியை அறிவித்த வத்திக்கான்!


பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு பின்னர் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு (Conclave) நடைபெறும் உத்தியோகபூர்வ திகதி அறிவித்துள்ளது.

குறித்த மாநாடு மே 7 ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு பாப்பரசர் தேர்தலுக்கு 135 கார்டினல்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர்களில் 53 கர்தினால்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள், 23 பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள், 20 பேர் வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், 18 பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள், 17 பேர் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஓசியானியாவைச் சேர்ந்த 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

பாப்பரசர் தேர்தலுக்கு வரும் கர்தினால்கள் 80 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு, பூமியில் மிகவும் இரகசியமான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது.

இரகசியமான வாக்கெடுப்பாக நடைபெறும் இந்த பாப்பரசர் தேர்தலுக்காக இன்று முதல் சிஸ்டைன் தேவாலயம் மூடப்பட்டுள்ளது.

சிவப்பு உடையில் அலங்கரிக்கப்பட்டு வாக்களிக்க வரும் கர்தினால்களின் வாக்குச் சீட்டுகள், பாப்பரசரை தேர்ந்தெடுத்த பின்னர் எரித்து அழிக்கப்படுவது மரபாகும்.

வாக்கெடுப்பு முடிந்த பின்னர், வாக்குச் சீட்டுகளை எரிப்பதால் வெளிப்படும் புகையின் மூலமே பாப்பரசர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வெளி உலகத்திற்கு தெரிவிக்கப்படும் அதன்படி, சிஸ்டைன் தேவாலயத்தின் புகைக்கூண்டிலிருந்து வெள்ளை புகை வெளியேறினால்

கர்தினால்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான திகதியை அறிவித்த வத்திக்கான்!

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...