நைஜீரியாவில் கண்ணிவெடியில் சிக்கிய டேங்கர் லாரி வெடித்ததில் 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
எதிரிப்படைகளை பழி வாங்குவதற்காக வெவ்வேறு இடங்களில் கண்ணி வெடிகள் பதிக்கப்பட்டுள்ள நிலையில்.
அவ்வாறு பதிக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியில் சிக்கிய டேங்கர் லாரி நேற்று வெடித்து சிதறியதாகவும்.
இந்த விபத்தில் அக்கம்பக்கத்தில் இருந்த ஆண்கள் 16 பேரும் பெண்கள் 4 பேரும் மற்றும் குழந்தைகள் 6 பேர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர் இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றும்.
நைஜீரியாவில் இது போன்ற விபத்து சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்ற நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் இத்தகைய வெடி விபத்துகளில் 40 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments