Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

வீசாக்களை நிராகரித்த கனடா!

கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து கனடா சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம் என்றே சொல்ல வேணடும், அதிலும் விசிட்டர் விசாவில் யாழ்ப்பாணம் உட்பட வட ப்குதியில் இருந்து பலர் கனடா சென்றுள்ளனர்.

இந்நிலையில் கனடாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை முன்னெப்போதும் இல்லாத அளவில் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டு . மொத்தமாக 2.35 மில்லியன் தற்காலிக விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இது முந்தைய ஆண்டை விட 1.8 மில்லியன் நிராகரிப்புகள் அல்லது 35 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. விசிட்டர் விசாக்கள் மிகக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


54 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் கோவிட் தொற்று பரவலின் பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்த அழுத்தத்தை குறைப்பதற்காகவே வீசாக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு காரணமாக கூறப்படுகின்றது.

நிராகரிக்கப்பட்ட 2.35 மில்லியன் விசாக்களில் 1.95 மில்லியன் விசாக்கள் பயண விசாக்கள் ஆகும். அத்துடன், ஆய்வு அனுமதி மற்றும் பணி அனுமதி விசாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.


கனடாவிற்கு புலம்பெயர முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கனடா தனது குடிவரவு விதிகளை கடுமையாக்கி வருகிறது. வளங்களை சிறப்பாக நிர்வகிப்பதற்காகவும் அவற்றை பாதுகாப்பதற்காகவும் கனேடிய அரசாங்கம் இந்த மாற்றங்களை செய்து வருகிறது.

இந்த மாற்றங்கள் வீட்டுவசதி மற்றும் சுகாதாரத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் அதேவேளை , கனேடிய அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையால் பல்வேறு தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வீசாக்களை நிராகரித்த கனடா!

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...