பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடன் பதற்றம் அதிகரித்து வருவதால் எல்லைப் பகுதியில் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது .
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை நேற்று (ஏப்ரல் 30) மீண்டும் ஆலோசனை நடத்தியது. இதனிடையே, இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை (சிசிஎஸ்) முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, விசா நிறுத்தம் உள்ளிட்ட சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்தது.
இந்நிலையில், "பிரதமர், மூத்த அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்கனவே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை (சிசிஎஸ்) கூட்டம் பிரதமர் மோதி தலைமையில் நேற்று நடைபெற்றதாக" கூறுகிறது.
"இதில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
எல்லையில் தொடர்ந்து 6வது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்துவதால், அந்நாட்டுக்கு இந்தியா நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதனால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது," என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது






3 Comments