நியூசிலாந்தில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றும்.
புயல்காற்று வீசுவதால் வெலிங்டனில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பசிபிக் கடல் நாடான நியூசிலாந்து வடக்கு தீவு மற்றும் தெற்கு தீவு என இரு பகுதிகளை உள்ளடக்கியது.
இந்த நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாகவும்.
வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர் என்றும்.
அவர்களை மீட்புப்படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியதாகவும்.
கிறிஸ்ட் சர்ச் நகரில் பெய்த கனமழையை தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தீவுகளின் சில பகுதிகளிலும் கடுமையான மழை மற்றும் கடலில் பேரலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments