இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 10, 2025) தனது இல்லத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை சார்ந்த மிக முக்கிய நபர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.






3 Comments