முன்னதாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை வரவேற்ற காங்கிரஸ் எம்.பி., பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 'பயங்கரவாதிகளுக்கு ஒரு பாடம்' கற்பிக்க டெல்லி விரும்புவதாகக் கூறினார்.
இந்தியாவுடன் அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதை அடுத்து, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"உஸ்கி ஃபித்ரத் ஹை முகர் ஜானே கி, உஸ்கே வாடே பெ யாகீன் கைசே கரு (அவர்களின் வார்த்தையைத் திரும்பப் பெறுவது அவர்களின் இயல்பு, அவர்களின் வாக்குறுதிகளை நான் எப்படி நம்புவது?)" என்று ஒரு இந்தி ஈரடிப் பாடலை சசி தரூர் வெளியிட்டார்.
முன்னதாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு குறித்து பதிலளித்த சசி தரூர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 'பயங்கரவாதிகளுக்கு ஒரு பாடம்' கற்பிக்க மட்டுமே இந்தியா விரும்பியது என்று கூறினார்.






3 Comments